வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (08:45 IST)

70 வயது ஆகிவிட்ட பிறகு இன்னும் ஏன் திருமண பேச்சு? திருநாவுக்கரசருக்கு அமைச்சர் பதிலடி

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக இணைந்த பின்னர் இந்த கூட்டணி குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் திருநாவுக்கரசர், 'அதிமுக-பாமக கூட்டணி என்பது கட்டாய திருமணம் போன்றது. அவர்கள் அவசரமாக தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்க அதுதான் கரணம். எங்கள் கூட்டணி என்பது மாமா பொண்ணு -அத்தை பொண்ணு போன்ற உறவு, என்று தெரிவித்தார்.

திருநாவுக்கரசரின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'எங்கள் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், கட்டாயக் கல்யாணம் என்று கூறியுள்ளார். அவருக்கு 70 வயதாகிறது. இப்போதும் அவருக்கு  கல்யாணம் பற்றியே யோசிக்கிறார் என்று கூறினார்.

மேலும் அதிமுக கூட்டணி கொள்கை அடிப்படையிலான கூட்டணி என்றும், சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது என்றும், திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும்போது, அதிமுக மட்டும் சும்மா இருக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பதிலடிக்கு திருநாவுக்கரசர் என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்