ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (08:28 IST)

ரேஷன் கடைகளை உடனே திறங்க.. – புயல் மாவட்டங்களுக்கு அமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ரேஷன் கடைகளை உடனடியாக திறக்க அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவார் புயலாக மாறி கரையை கடக்க உள்ளது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க முதல்வர் அறிவுறுத்தியுள்ள நிலையில் முன்கூட்டியே உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் பொருட்டு ரேஷன் கடைகளை வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே திறக்கவும், மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கவும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.