1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:32 IST)

எம்.ஜி.ஆர்.-க்கு கிட்னி தானம் செய்தவர் பாஜகவில் இணைந்து அதிர்ச்சி!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின், சகோதரர் சக்கரபாணியின் மகள் லீலாவதியும், அவரது மகனும் பாஜகவில் இணைந்தனர்.


 

எம்.ஜி.ஆர். கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டபோது, எம்.ஜி.ஆர். அவர்களின், சகோதரர் சக்கரபாணியின் மகள் லீலாவதி தான் அவருக்கு கிட்னி தானம் அளித்தார். தற்போது, அவரும், அவரது மகன் பிரவீனும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இணைவிற்குப் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன், பிரவீன் மோடி பிரதமராக நேர்மையாக இருக்கிறார். நேர்மையாக ஆட்சி செய்கிறார். சிறந்த தலைவராக இருக்கிறார்.

எம்.ஜி.ஆரே இருந்திருந்தால் மோடியைத்தான் ஆதரித்திருப்பார். ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன். பாஜகவில் என்னை இணைத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.