1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (09:01 IST)

தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் சேர்ப்பு!

தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் ஊரடங்கு உத்தரவுக்கு பின் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்யவும் மாவட்டங்களுக்குள் பயணம் செய்யவும் இ-பதிவு அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒரு இணையதள முகவரியையும் அறிவித்து இருந்தது. இந்த இணையதள முகவரியில் பதிவு செய்துவிட்டு முக்கிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டத்திற்கு வெளியேயும், மாவட்டத்திற்கு உள்ளேயேயும் பயணம் செய்யலாம். 
 
ஆனால், மக்கள் ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் திருமணம் என்ற காரணத்தை இ-பதிவில் இருந்து அரசு நீக்கியிருந்தது. இந்நிலையில், பொதுமக்களிடம் அதிக அளவு கோரிக்கை வந்ததை அடுத்து மீண்டும் திருமண அனுமதி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.