சோறு போட்ட தமிழகத்திற்கு துரோகம் செய்வதா? : நடிகைக்கு மன்சூர் அலிகான் கண்டனம்
சோறு போட்ட தமிழகத்திற்கு துரோகம் செய்வதா? : நடிகைக்கு மன்சூர் அலிகான் கண்டனம்
கர்நாடகாவிடமிருந்து ஒவ்வொரு முறையும், போராடித்தான் காவிரி நீரை பெற வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்புதான், தற்போது தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு.
அதற்கு கர்நாடகாவில் பல்வேறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் “தமிழர்களுக்கு நாம் ஏன் தண்ணீர் தரவேண்டும். காவிர் நீர் நம்முடையது” எனும் ரீதியில் பேசியிருந்தார். அதேபோல், கன்னட நடிகர், நடிகைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும், அவர் கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக பேசியிருந்தார். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்துள்ளார்....
அவரின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் “கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிப்பு காட்டுவது கண்டனத்திற்கு உரியது. சோறு போட்ட தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள். விவசாயிகள் கடவுள் போன்றவர்கள். வாழ்வாதாரத்துக்கான உரிமையைத்தான் அவர்கல் கேட்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கர்நடகம், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பது தேசியத்தை கேலிக்கூத்தாகி வருகிறது” என்று கூறினார்.