வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:59 IST)

சாக்லெட் வாங்கி கொடுத்து சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்ட மெக்கானிக்!

சாக்லெட் வாங்கி கொடுத்து சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்ட மெக்கானிக்!

சேலம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு மெக்கானிக் ஒருவர் சாக்லெட் வாங்கி கொடுத்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சேலம் மாவட்டம் கொங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி புதூரை சேர்ந்த 28 வயதான தியாகராஜன் என்பவர் அங்கு இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.
 
இவர் நேற்று முன்தினம் தனது கடைக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து தான் கடை வைத்திருக்கும் கட்டிடத்தின்  மாடிக்கு அழைத்து சென்றுள்ளார்.
 
இதனை அந்த சிறுமியின் தங்கை பார்த்து தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே அந்த சிறுமியின் தாய் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த நபர் சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். இதனால் அந்த சிறுமியின் தாய் சத்தம் போட அருகில் இருந்த அனைவரும் கூடிவிட்டனர்.
 
அவர் சத்தம் போட்டதும் அந்த மெக்கானிக் தியாகராஜன் மாடியின் பின் பக்க வழியாக எட்டி குதித்து தப்பியோடியுள்ளார். மெக்கானிக் தியாகராஜன் சிறுமியின் உதட்டில் கடித்ததில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை சேலம் ஆத்தூர் மருத்துவமனையில் சேர்த்த அவரது தாய் ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மெக்கானிக் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.