என்னிடம் ஆசையாக பேசி எய்ட்ஸ் நோயைப் பரப்பிவிட்டார் – பெண்ணின் மீது குற்றம் சாட்டும் இளைஞர்!

Last Updated: புதன், 13 ஜனவரி 2021 (10:08 IST)

சேலத்தைச் சேர்ந்த இளைஞர் பெண் ஒருவர் தனக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிவிட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவருடன் கடுமையாக வாக்குவாதம் செய்து வந்தார். இதுகுறித்து விசாரித்த போது அந்த பெண் வேலைப்பார்க்கும் நகைக்கடையில் அந்த இளைஞர் நகைச்சீட்டு போட்டு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணோடு பழகி இருவரும் நெருக்கமாகியுள்ளனர். அந்த பெண்ணோ திருமணம் ஆகி கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதையடுத்து இருவரும் விடுதியில் அறையெடுத்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு அந்த இளைஞருக்கு உடல்நலம் குன்றிய போது எடுத்த பரிசோதித்த போது அவருக்கு ஹெச் எய் வி பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்தான் தனக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிவிட்டதாக அந்த இளைஞர் அவரிடம் தகராறு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணோ தனக்கு எய்ட்ஸ் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு உண்டாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :