கார்த்திக் என்னுடன்தான் இருக்கிறான் - மைனா நந்தினி உருக்கம்
தனது கணவர் கார்த்திக்கின் நினைவை மறக்கவே மீண்டும் நடிக்க செல்வதாக விஜய் டிவி புகழ் மைனா நந்தினி தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சி தொடரில் வெளியான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களுடன் பிரபலமான நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு நந்தினி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் கார்த்திக்கின் ஞாபகங்கள் இன்னும் என்னை விட்டு அகலவில்லை. ஒவ்வொருநாளும் வலி, வேதனையோடுதான் படப்பிடிப்பிற்கு செல்கிறேன். என் பெற்றோர் மட்டும் தம்பி என என்னை நம்பியிருக்கும் மூவருக்காக நான் வேலை செய்கிறேன். இந்த ஜூன் மாதம் 6ம் தேதி எனக்கு திருமணம் முடிஞ்சி ஒரு வருடம் முடிந்துவிட்டது. அன்று, கார்த்திக்கை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு வந்தேன். என் கார்த்திக் என்னை விட்டு எங்கும் சென்றுவிடவில்லை. அவன் என்னுடன்தான் இருக்கிறான். நடந்ததை மறக்க வேண்டும் என்பதற்காகவே மீண்டும் நடிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.