ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு இலவச கேஸ் அடுப்பு: குவியும் உதவிகள்

sivalingam| Last Modified வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (07:46 IST)
கோவையைச் சேர்ந்த கமலாத்தாள் என்ற பாட்டி கடந்த 30 ஆண்டுகளாக பொது மக்களின் பசியை தீர்க்கும் வகையில் ஒரு ரூபாய்க்கு ஆவி பறக்கும் இட்லியை விற்பனை செய்து வருவது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், இந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு தற்போது உதவிகள் குவிந்து வருகிறது


கமலாத்தாள் பாட்டியின் சேவை குறித்து ஏற்கனவே கோவை மாவட்ட கலெக்டர் கேள்விப்பட்டு அந்த பாட்டியை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அரசு வழங்கும் இலவச வீடு ஒன்றை வழங்க முன்வந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு தற்போது இலவச கேஸ் அடுப்பு ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அளித்துள்ளது. கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருவதை சமூக வலைதளம் மூலம் கேள்விப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் அந்த பாட்டிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவர் மர அடுப்பை பயன்படுத்துவதை கேள்விப்பட்டு அவருடைய உடல் நலத்தை கணக்கில் கொண்டு கேஸ் அடுப்பு இலவசமாக தர முன்வந்தார்


இதேபோல் மத்திய பெட்ரோலிய அமைச்சர் அந்த பாட்டிக்கு இலவச கேஸ் சிலிண்டர் கொடுக்க முன்வந்தார். இதனை அடுத்து கோவையைச் சேர்ந்த பாரத் கேஸ் நிறுவனம் கமலாத்தாள் பாட்டிக்கு இலவச கேஸ் சிலிண்டரை வழங்கியது. அதேபோல் மகேந்திரா நிறுவனமும் இலவச கேஸ் அடுப்பு வழங்க தற்போது அந்த பாட்டி கேஸ் அடுப்பில் இட்லி தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் அந்த பாட்டிக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று பல தொழில் அதிபர்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர். 30 ஆண்டுகளாக மக்களின் பசியைப் போக்கிய இந்த பாட்டி தற்போது இந்தியா முழுவதும் புகழ் பெற்று வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :