1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (09:48 IST)

பிரியாணி, புரோட்டா வாங்கினால் மாஸ்க், சானிடைசர் இலவசம்: மதுரை ஓட்டலின் அசத்தல் அறிவிப்பு

பிரியாணி, புரோட்டா வாங்கினால் மாஸ்க், சானிடைசர் இலவசம்
மதுரையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் தனது கடைக்கு புரோட்டா, சிக்கன், மட்டன், பிரியாணி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மாஸ்க் மற்றும் சானிடைசர்களை வழங்கி அசத்தி வருகிறார் 
 
சென்னையை அடுத்து மதுரையில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மதுரை மக்களை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்க மதுரை ஓட்டல் அதிபர் நவநீதன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவருக்கு மதுரை முழுவதும் பல கிளைகள் உள்ளது. 50 வருடமாக ஓட்டல் நடத்தி வரும் நவநீதன் தங்களது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிக்கன், மட்டன், பிரியாணி, புரோட்டா வாங்கினால் அவர்களுக்கு மாஸ்குகள் மற்றும் கிருமி நாசினி பாட்டில்களை இலவசமாக வழங்கிவருகிறார். அதுமட்டுமின்றி கொரோனா நோயை கட்டுப்படுத்தும் மாத்திரையும் வழங்கி வருகிறார்
 
இது குறித்து அவர் கூறியபோது எனது சொந்த பணத்தில் ரூபாய் 50 ஆயிரம் வரை செலவு செய்து மாஸ்குகள் மற்றும் கிருமி நாசினிகளை வாங்கி வைத்து இருப்பதாகவும் உணவு பொருட்களை வாங்க வரும் அனைவருக்கும் இதனை இலவசமாக கொடுத்து வருவதாகவும் மதுரை மக்களை கொரோனாவில் இருந்து மீட்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்