1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 27 மே 2017 (15:59 IST)

காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்து தற்கொலை செய்த காதலர்கள்!

காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்து தற்கொலை செய்த காதலர்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் தங்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.


 
 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியை சேர்ந்த பாலு என்பவரது மகன் விஜயகுமார். 21 வயதான இவர் விஜயகுமார் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு தனியார் ஐடிஐயில் மெக்கானிக்கல் படித்துள்ளார்.
 
இவர் அதே பகுதியை சேர்ந்த அபிராமி சுந்தரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். 21 வயதான அபிராமி சுந்தரியும் விஜயகுமார் படித்த கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார்.
 
இவர்களது காதல் விவகாரம் அபிராமி சுந்தரியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் காதல் ஜோடியை கடுமையாக கண்டித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடிகள் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.