காதல், உல்லாசம், ஆபாச புகைப்படம் வெளியீடு: காதல் மன்னனுக்கு வலை வீச்சு!

காதல், உல்லாசம், ஆபாச புகைப்படம் வெளியீடு: காதல் மன்னனுக்கு வலை வீச்சு!


Caston| Last Updated: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (13:22 IST)
சென்னையில் இளம்பெண்களை காதலித்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு. அவர்களின் ஆபாச புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்த காதல் மன்னனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 
 
சென்னை சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து ஒருவன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
சாமுவேல் என்ற இளைஞன் எனது மகளின் பின்னால் சுற்றி அவளை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தான். ஆனால் எனது மகள் அதனை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் எனது மகளின் புகைப்படத்தை ஆபாசமாக கிராஃபிக்ஸ் செய்து அதனை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளான்.
 
இதேப்போல் ஏராளமான பெண்களை அந்த நபர் காதலித்து அவர்களுடன் நெருக்கமாக பழகி பின்னர் அவர்களின் ஆபாச புகைப்படங்களை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சாமுவேல் என்ற அந்த இளைஞர் கல்லூரி மாணவிகள் உள்பட 10 இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து அவர்களின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் சாமுவேலை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :