வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 ஜனவரி 2021 (10:52 IST)

திருவள்ளுவர் தினத்தில் மோடியை புகழ்ந்து தள்ளிய குஷ்பூ!!

திருக்குறளும் மோடி அவர்களும் இரண்டறக்கலந்த பிரிக்க முடியாத சக்திகள் என நடிகை குஷ்பூ டிவிட்டரில் பதிவு. 

 
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப் பொங்கலாகவும் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். 
 
மேலும் அன்றைய தினம் திருவள்ளுவர் குறித்த அருமை பெருமைகளையும் தலைவர்கள் பதிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும் என  தமிழில் ட்வீட் செய்துள்ளார். 
 
இந்நிலையில் நடிகையும் பாஜக பிரமுகரும், திருக்குறள் இது வெறும் புத்தகம் மட்டுமல்ல நம் அனைவரது வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒரு விளக்கு எனவே இதை கட்டாயம் படிப்பது நமது கடமையாகும் என இந்த உயரிய சிந்தனையை உலகுக்கு உரக்கச் சொன்னவர் நமது பாரதப்பிரதமர் மாண்புமிகு மோடி ஜி.  
 
எனவே, திருக்குறளும் மோடி ஜி அவர்களும் இரண்டறக்கலந்த பிரிக்க முடியாத சக்திகள் என்பதற்கு அவரது ட்வீட்டில் அவர் திருக்குறளை பற்றி குறிப்பிட்டுள்ள வரிகளே சான்றாகும் என குறிப்பிட்டுள்ளார்.