1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (14:02 IST)

டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் #JusticeForPrabhu: கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள்..!

murder
டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் #JusticeForPrabhu: கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள்..!
திமுக கவுன்சிலர் ஒருவர் ராணுவ வீரரை அடித்து கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வட இந்திய ஊடகங்கள் இது குறித்து செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. மேலும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வழக்கம் போல் தமிழக ஊடகங்கள் இந்த செய்தியை கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சின்னச்சாமி என்பவரும் அவருடைய ஆதரவாளரும் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து திமுக கவுன்சிலர் சின்னசாமி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து வட இந்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக விவாதங்களை நடத்தி வருகின்றன. ஆனால் ஒரு தமிழக ஊடகங்கள் கூட இது குறித்த விவாதங்களை நடத்தவில்லை 
 
இந்த நிலையில் ட்விட்டரில் #JusticeForPrabhu என்ற ஹேஷ்டேக் டிரண்டாகியுள்ள நிலையில்  தமிழக ஊடகங்களும் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva