1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (17:14 IST)

கொடநாடு விவகாரம்: சசிகலாவையும் விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகிய இருவரையும் விசாரணை செய்ய வேண்டுமென சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி வருவதை அடுத்து அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகிய இருவரையும் விசாரணை செய்யவேண்டும் என குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.