1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மே 2023 (15:51 IST)

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! - சோகத்தில் முடிந்த சுற்றுலா!

Accident
கொடைக்கானலில் சுற்றுலா சென்ற பயணிகள் வேன் ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பலரும் மலைவாச சுற்றுலா செல்ல விரும்பி ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அப்படியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த குடும்பத்தினர் வேனில் கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர்.

அதையடுத்து பழனிக்கு செல்ல அவர்கள் வேனில் புறப்பட்டுள்ளனர். வேன் பழனி ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தபோது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 21 பேரும் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாரியம்மாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சுற்றுலா சீசன் காரணமாக பலரும் மலைவாச ஸ்தலங்களுக்கு பயணிக்கும் நிலையில் கவனமாக இருக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Edit by Prasanth.K