குஷ்புவுக்கு தடை விதித்த காங்கிரஸ்: பிளீஸ் பிரச்சாரத்துக்கு வராதீங்க!

குஷ்புவுக்கு தடை விதித்த காங்கிரஸ்: பிளீஸ் பிரச்சாரத்துக்கு வராதீங்க!


Caston| Last Updated: செவ்வாய், 15 நவம்பர் 2016 (14:31 IST)
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி சொந்த கட்சிக்கே சங்கடத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கு புதுவை காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

 
 
புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தான் நாராயணசாமி முதல்வராக நீடிக்க முடியும் என்கிற கடினமான சூழல் அவருக்கு. அவரை எதிர்த்து வலுவான நிலையில் உள்ளது அதிமுக கூட்டணி.
 
இந்நிலையில் காங்கிரஸ் நாராயணசாமியை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தால் அது அவருக்கு பின்னடைவாக இருக்கும் என புதுவை காங்கிரஸ் மற்றும் ஆதரவு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை.
 
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பேசிய குஷ்புவுக்கு பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்கள் உள்ள நெல்லித்தோப்பு தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு குஷ்பு வந்தால் அது பின்னடைவாக அமையும் எனவே அவரை பிரச்சாரத்துக்கு அனுமதிக்க கூடாது என நாராயணசாமியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது.
 
இதனையடுத்து திமுக, காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகள் குஷ்புவின் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க புதுச்சேரி மாநில காங்கிரஸ் குஷ்புவை பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என கூறிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

 


இதில் மேலும் படிக்கவும் :