குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் இடையே தகராறு.. பெயர் வைத்த நீதிமன்றம்!
குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து நீதிமன்றமே தலையிட்டு குழந்தைக்கு பெயர் வைத்துள்ள அதிசயம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இருவரும் கேரள நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர்.
குழந்தைக்கு பெயர் வைக்க தங்களுக்கே அதிகாரம் உள்ளது என தாய் மற்றும் தந்தை இருவரும் வாதாடினார். இதனை அடுத்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி குழந்தைக்கு உயர் நீதிமன்றமே பெயர் வைத்துள்ளது.
குழந்தைக்கு புன்யா நாயர் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தாயும், பத்மா நாயர் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தந்தையை வாதாடிய செய்த நிலையில் புன்யா பாலகங்காதரன் நாயர் என்று நீதிமன்றமே பெயர் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva