1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2017 (16:35 IST)

அரசியல்வாதிகளே! கட்டுங்கள் எட்டு முழ சேலை - கமல் ரசிகர்கள் கொந்தளிப்பு

நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் கமல்ஹாசன் ரசிகர்கள் தமிழகமெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.


 

 
தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
எனவே, கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கும் தமிழக அரசியல்வாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள், அவருக்கு ஆதரவாகவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
 
அதில் சிலவற்றில், “தோற்றால் போராளி, முடிவெடுத்தால் முதல்வர். இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூபம் ஆட்டம் ஆரம்பம்” என்றும், “எங்களின் முதல்வா, தமிழகம் தலை நிமிர வா...வா..., எம் தலைவன் அல்ல கோழை. தலைவனை தவறாக பேசும் முட்டாள் அரசியல்வாதிகளே நீங்கள் கட்ட வேண்டியது எட்டு முழம் சேலை” என்றெல்லாம் வாசகங்கள் தெறித்தது.