வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (00:52 IST)

நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா? கமல்ஹாசனின் சூப்பர் நக்கல்

உலக நாயகன் கமல்ஹாசன் தன்னை விமர்சனம் செய்தவர்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நக்கல், நையாண்டியுடன் பதிலடி கொடுப்பதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே



 
 
இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியபோது, ''தமிழ் தலைவாஸ்' எனப் பன்மையில் பெயர் வைத்தது சந்தோஷமாக இருக்கிறது. சமீபகாலமாக ஒருமையில் பேசுவது வழக்கமாகி விட்டது. (அரங்கில் பயங்கர கைதட்டல் கேட்டது) ஏதாவது தப்பாக சொல்லிவிட்டேனா... அந்தத் தலைப்பின் மூலம் எல்லோரும் இந்நாட்டின் மன்னரே என கூறியுள்ளார்கள்' என்று கூறினார்
 
இந்த நிகழ்ச்சியில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் சச்சின், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.