செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (17:19 IST)

கிண்டல் செய்பவர்கள் செய்யட்டும்: இல்லத்தரசிகள் ஊதியம் நடந்தே தீரும்: கமல்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது மக்கள் நீதி மய்யம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தார் 
 
கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த பெண்கள் வாக்குகளும் அக்கட்சிக்கு சேர்ந்து விடுமோ என்ற அச்சம் மற்ற கட்சிகளுக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பது சாத்தியமில்லை என்றும் பல அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் கிண்டலடித்தனர் ஒருசில திரையுலகினரும் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கமல்ஹாசன் கூறியபோது இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று நான் சொன்னதை பலர் கிண்டல் அடித்தார்கள், இன்னமும் கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். கிண்டல் செய்பவர்கள் கிண்டல் செய்து கொண்டே இருக்கட்டும். ஆனால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பது நிச்சயம் நிகழ்ந்தே தீரும் என்று உறுதி அளித்துள்ளார் கமலஹாசனின் இந்த உறுதியான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது