1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (15:34 IST)

கமல் கனவு காண்பதை சினிமாவுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்: வைகைச் செல்வன்

நடிகர் கமல்ஹாசன் கனவு காண்பதை சினிமாவுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும், அவரது கனவு ஒருபோதும் பலிக்காது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.


 

 
தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், மக்கள் விரும்பாத நிலையில் தமிழகத்தில் அரசு நான்கு ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. தமிழகத்தில் தேர்தல் விரைவில் நடைப்பெற வேண்டும் என கூறினார்.
 
இதற்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கமல்ஹாசனின் கனவு ஒருபோதும் பலிக்காது என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு 5 ஆண்டு காலம் நிறைவு செய்யும். எனவே நடிகர் கமல்ஹாசன் கனவு காண்பதை சினிமா உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது, என தெரிவித்துள்ளார்.