1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (22:01 IST)

பிக்பாஸ் வழக்கு: கமல் மனுவை ஏற்று கொண்ட ஐகோர்ட்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் அரசியல் கட்சிகளும், ஒருசில அமைப்புகளும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தன. காயத்ரி கூறிய ஒரு வார்த்தையை குறிப்பிட்டு தமிழ் கலாச்சாரத்திற்கே பாதிப்பு வந்துவிட்டதாகவும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று எச்சரித்தனர்.



 
 
எதிர்ப்பு அதிகமாக அதிகமாக இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பும் அதிகமாகியது. அதே நேரத்தில் ஓவியாவின் உண்மை அனைவருக்கும் பிடித்தது. ஓவியாக்காகவே ஒரு கூட்டம் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கியது
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்ற தாக்கல் செய்த மனுமீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது கமல் தரப்பில் தாக்கல் செய்ப்பட்ட பதில் மனுவில், 'பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு என்றும், மத்திய அரசு மற்றும் கண்காணிப்பு குழு மட்டுமே இந்த நிகழ்ச்சி குறித்து ஆராய முடியும் என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.