ரஜினியுடன் இணைவார்களா கமல், அஜித், விஜய்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த கட்டம் அரசியல் தான் என்பதை முடிவு செய்துவிட்டார். அனேகமாக 'காலா' தான் அவரது கடைசி படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் முழுநேர அரசியல்தான்
இந்த முறை ரஜினியின் பேச்சு, நடவடிக்கை அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது 100% உறுதி என்றே கூறப்படுகிறது. ரஜினிகாந்த் தினமும் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்து ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வருகிறாராம்.
இப்போதைக்கு எந்த அரசியல் கட்சியையும் நேரடியாக தாக்காமல் அரசியல் செய்வதுதான் ரஜினியின் எண்ணமாம். போர் வரும்போது தமது எதிரி யார் என்பதை அடையாளம் கொண்டு அவர்கள் மீது அட்டாக் செய்வது தான் ரஜினியின் எண்ணமாம். இந்நிலையில் தனது அரசியல் கட்சிக்கு திரையுலக பிரபலங்களையும் இழுக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். குறிப்பாக கமல், அஜித், விஜய் மூவரும் ரஜினியின் டார்கெட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிமே நேரடியாக வந்து ஆதரவு கேட்டால் மூவரும் மறுக்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.