ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (10:18 IST)

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்..! 11 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்..!!

Kallakurichi
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், வானபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.      
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 66 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 
 
மேலும் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.


கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன் மற்றும் சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.