பதவியேற்பு நாளில் தாயாரை இழந்த எம் எல் ஏ!
ஜெயங்கொண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் க சொ க கண்ணனின் தாயார் இன்று காலமாகியுள்ளார்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் க சொ க கண்ணன். இன்று அவர் சென்னையில் பதவி ஏற்ற நிலையில் அவரின் தாயார் மணிமேகலை இயற்கை எய்தியுள்ளார். திமுக முன்னாள் தலைவர்களில் ஒருவரான க சொ கணேசனின் துணைவியாரான அவரின் இறுதி ஊர்வலம் நாளை காலை நடக்க உள்ளது.