நடிகர் விஷாலுக்கு கடிதம் எழுதிவிட்டு துணை நடிகர் தற்கொலை முயற்சி!


Dinesh| Last Modified வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (08:19 IST)
சென்னை எம்.கே.பி. நகரில் வசித்து வரும் இளவரசன் என்பவர், சிறுத்தை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சகுனி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்தவர்.

 


இவர் திடீரென எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலை முயற்சிக்கு முன்பு, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியதாவது, ”சில தயாரிப்பாளர்கள் என் சம்பள பணத்தை வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கின்றனர். இதனால், நான், போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். இதன் காரணமாக எனது, மனைவியும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தற்போது, அவரிடம் இருந்து, எனக்கு விவாகரத்து நோட்டீசும் வந்துள்ளது. என்னை போன்று, கஷ்டத்தில் இருக்கும், அனைத்து நடிகர்களுக்கும் உரிய வருமானம் கிடைக்க வழி வகை செய்யுங்கள்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், எலி மருந்தை சாப்பிட்டு, மயங்கிய நிலையில் இருந்த இளவரசனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :