1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2016 (11:01 IST)

ஜெயலலிதா தேர்தல் வியூகம்: மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய திட்டம்?

தமிழக தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக தேர்தல் வியூகமாக மாவட்ட செயலாளர்களில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தல் பணிகளை திறம்பட செய்யவே இந்த மற்றம் செய்யப்பட இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.


 
 
நேற்று முன்தினம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் ஜெயலலிதா. பின்னர் இந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை ஜெயலலிதா தொடங்குவார் என்ற தகவலும் வந்தது.
 
இதனையடுத்து அதிமுகவில் தேர்தல் பணிகள் விறுவிறுவென நடந்து வருகிறது. தேர்தல் பணிகளை எப்படி செய்வது. வியூகங்கள் வகுத்து தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பின்னர் இவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கின்றனர்.
 
இந்நிலையில், அதிமுகவில் விரைவில் மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக வேட்பாளர் பட்டியலில் 
பல இடங்களில் புதுமுகங்கள் மற்றும் சில இடங்களில் பழைய முகங்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதற்கு ஏற்றபடி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.