1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2016 (10:37 IST)

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதானவிசாரணையை உச்சநீதிமன்றம் மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
 

 
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது.
 
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே,பி.வி.ஆச்சார்யா ஆகியோரும், சுப்பிரமணியசாமி தரப்பில் அவரும், ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் ஆகியோரும் தங்களின் இறுதி வாதத்தை முடித்து விட்டனர்.
 
தற்போது சசிகலா தரப்பில் சேகர் நாப்தேவாதங்களை தொடர்ந்து வருகிறார். நேற்று புதனன்றும் அவர் தமதுவாதங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை மே 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் சசிகலாவின் வழக்கறிஞர் சேகர் நாப்தே தமது வாதங்களை தொடர உள்ளார்.