வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (13:38 IST)

”போராட்டக்காரர்கள் தீவிரவாதிகளாகவும் இருக்கலாம்” - எச்சரிக்கை விடுக்கும் மாநகர ஆணையர்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் புதிய நட்புகளுடன் பழக்கம் வேண்டாம். அவர்கள் சமூக விரோதிகள் மட்டுமல்ல தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் என கோவை மாநகர ஆணையர் கூறியுள்ளார்.


 

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கியுள்ளனர்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால், தடியடி நடத்தப்பட்டது. இதையொட்டி பெரும் கலவரம் உருவானது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதேபோல் கோவையிலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், செய்தியாளார்களிடம் பேசிய கோவை மாநகர கமிஷனர் விமல்ராஜ், ”பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டது. இதில், கலவரம் உருவாகி போலீசார் தடியடி நடத்தி, கலைய செய்தனர். இந்த சம்பவதில், சமூக விரோதிகள் பலர் உள்ளே நுழைந்துவிட்டனர். அவர்களின் தூண்டுதலின்பேரில் இந்த கலவரம் நடந்துள்ளது.

கோவை நகரில் 4000 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில், அனைத்து காட்சிகளும் பதிவாகி உள்ளன. இதை வைத்து, சமூக விரோதிகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவற்றில் வெளியாகும் அனைத்து தகவல்களும் உண்மையானது அல்ல. அதை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற தகவல்களை பரப்புவதை குறைக்க வேண்டும். அப்படி தகவல் பரவுவதை குறைந்தால், குற்ற சம்பவங்களும் தடுக்கப்படும்.

நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, உங்களுடன் நட்பு கொண்டவர்களுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம். மாணவர்களின் அமைதியான போராட்டத்தில், சிலர் ஊடுருவி சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் சமூக விரோதிகள் மட்டுமல்ல தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்” என்று எச்சரித்துள்ளார்.