1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 21 ஜனவரி 2017 (16:30 IST)

ஜல்லிக்கட்டு அவசர சட்டம், சட்டப்படி செல்லாது: ஏமாற்றும் அரசு; பகீர் தகவல்!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அவசர சட்டம் இயற்றுவது, அரசியல் சட்டப்படி செல்லாது என்று முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார்.


 
 
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது. இது குறித்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் கூறியவை, ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக அரசை மத்திய அரசு அழைத்து பேசுகிறது. ஆனால், இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வருவது தேவையற்றது. அதற்கான அவசியமும் இல்லை என தெரிவித்தார்.
 
மேலும் அவர், தற்போதைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றுவது அரசியல் சட்டப்படி செல்லும் என்று கருதவில்லை. இருப்பினும், எந்த வி‌ஷயமாக இருந்தாலும், என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.