1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (05:29 IST)

வீட்டுக்கு வெளியே தூங்கியவர்களை கடித்து குதறிய நரி

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை நரி கடித்து குதறியுள்ளது.


 

 
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்புக்கு அருகில் சுடுகாடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு பலர் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் சூர்யா(23), சுமதி(43), ஆறுமுகம்(65) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரை ஒரு மர்ம விலங்கு கை, கால்களில் கடித்து குதறியது.
 
நாய்கள் கடித்து இருக்கலாம் என்று கருதிய அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு சிகிச்சையளித்த டாக்டர் அவர்களை கடித்தது நாய் அல்ல நரி என்றார்.
 
அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் அடைத்து வைத்திருந்த கோழிகள், வான்கோழிகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன.
 
சுடுகாட்டை ஒட்டியுள்ள காட்டில் உள்ள நரிகள் உணவு கிடைக்காததால் தூங்கிக்கொண்டு இருந்தவர்களையும், கோழிகளையும் கடித்து குதறியிருக்கலாம் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். 
 
இதனால் பரபரப்பு ஏற்பட்டு இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பயந்து வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்