1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (16:23 IST)

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை - வானிலை மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
 
காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என அவர் தெரிவித்தார்.
 
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது  பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.