சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (07:52 IST)

ராம்குமார் தீவிரவாதியா?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தீவிரவாதியா என கேள்வி எழுப்பியுள்ளார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி.


 
 
சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, ராம்குமாருக்கு ஆதரவாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி களம் இறங்கியுள்ளார். இந்த கொலைக்கும், ராம்குமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
நேற்று மதியம் ராம்குமார் சார்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, ராம்குமார் ஒரு சாதாரண விவசாயியின் மகன்.
 
ராம்குமார் கைது செய்வதற்கு முதல் நாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போதே அவரை போலீசார் கைது செய்திருக்கலாம். அதை விட்டு இரவு நேரத்தில் அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்றார்.
 
ராம்குமாரை இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன தீவிரவாதியா என்று, ராம்குமாரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.