கமலுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது சரியா?
பிரபல மலையாள நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவருடைய பெயரை கமல் கூறிவிட்டதாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மகளிர் ஆணையம். இதுசரியா என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் பெரும் வாக்குவாதம் நடந்து வருகிறது.
பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகையின் பெயர் வராத மீடியா உண்டா? அந்த மீடியாக்களுக்கு மீடியா ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை
நடிகைக்கு நடந்த கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை பெயரை சொல்லி அவருக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஏன் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பவில்லை
நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளையே தேர்வு ஆய்வாளர்கள் கழட்ட சொன்ன போது இந்த மகளிர் ஆணையம் எங்கே சென்றது
நாளை இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது வழக்கரிஞர்களும், நீதிபதிகளும் அந்த நடிகையின் பெயரை சொல்லாமலேயே வழக்கை நடத்த முடியுமா? ஒருவேளை அவருடைய பெயரை சொன்னால் அவர்களுக்கும் இந்த மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்புமா?
விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகள் தான் இம்மாதிரி வேலைகளை செய்கிறது என்றால் மகளிர் ஆணையமே நீங்களுமா?
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.