ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (21:13 IST)

திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டிற்கு எம்பி., கனிமொழிக்கு அழைப்பு

dmk
‘மாநில உரிமை மீட்பு முழக்கமான - இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழை இன்று எம்பி கனிமொழியை  நேரில் வழங்கினோம்' என்று அமைச்சர் உதயநிதி  தெரிவித்துள்ளார்.
 
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அந்த மாநாடு டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இது குறித்து திமுக இளைஞரணி சமீபத்தில்  வெளியிட்ட அறிவிப்பில் ‘ 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15 திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி முதல் மாநாட்டினை தொடர்ந்து வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் மழை காரணமாக ஒரு வார காலத்திற்கு இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 25 நான்காம் தேதி நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டது.
 
நம் பெருமைமிகு  திமுக இளைஞரணி மாநாடு-ன் 2-ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 24ஆம் தேதியன்று எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான கொடிமேடையில் கொடியேற்றி வைக்கவுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் - அத்தை  கனிமொழி அவர்களை இன்று நேரில் சந்தித்து  ‘மாநில உரிமை மீட்பு முழக்கமான - இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழை இன்று நேரில் வழங்கினோம் என்று தெரிவித்துள்ளார்.