1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated :சிவகங்கை , திங்கள், 18 மார்ச் 2024 (12:50 IST)

தேர்தல் பணிக்காக வாகனங்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் சிவகங்கை மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
 
வரும்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், உடனடியாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது
 
முதல்  கட்டமாக   தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ எடுக்கும் குழு, பார்க்கும் குழு, கணக்கியல் குழு என தேர்தல் பணிக்காக 24 நான்கு சக்கர வாகனங்களில் அதிகாரிகள் பணி செய்ய உள்ளனர்.
 
அவர்கள் பணி செய்யும் வாகனத்தில் 5g மற்றும் சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய360 டிகிரி கேமரா பொருத்தும் பணிதீவிர படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.
 
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 
வீடியோ பதிவு செய்பவருடன், வாகனங்களில் உள்ள கேமராவில் பதிவாவதை, கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது .