1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (13:10 IST)

சிறை கைதிகள் உறவினர்களிடம் பேசும் கால அளவு அதிகரிப்பு

சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில்  சிறைச்சாலைகளில் உள்ள  சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒருமுறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி வழங்குவதோடு, காணொலி தொலைபேசி வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'' 
சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள்  தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் குறைக்கவும் அவர்கள் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோர் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளது.