நிவேதாவை கார் ஏற்றி கொன்ற இளையராஜா சிறையில் தற்கொலை...
கோவையை சேர்ந்த நிவேதா என்ற ஆசிரியரை, சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்த விவகாரத்தில், போலீசாரால் கைது செய்யப்பட்ட இளையராஜா சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி இளையராஜா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியபோது “நான் கோவையில் நிவேதா தங்கியிருக்கும் அதே அபார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்தேன். அவரின் நிவேதாவின் தாயாருக்கு நிறைய உதவிகள் செய்து வந்தேன். அதனால், நிவேதாவிற்கு என்னை பிடித்துப் போனது. என் மீது காதலும் ஏற்பட்டது. கணவரை பிரிந்து இருப்பதால், அவர் அன்புக்கு ஏங்கினார். அந்த அன்பை நான் கொடுத்தேன்.
குடும்பசூழல் காரணமாக எனக்கு திருமணம் நடந்த போதும் கூட நான் நிவேதாவுடனான உறவை துண்டிக்கவில்லை. அவரை தொடர்ந்து நேசித்து வந்தேன்.
இந்நிலையில், கணபதி எங்கள் காதலுக்கு குறுக்கே வந்தார். பேஸ்புக் மூலம் நிவேதாவுடன் பழகி, ஆசை வார்த்தைகளை கூறி அவரை மயக்கினார். தனக்கு பல பிரச்சனைகள் இருப்பதாக கூறி நிவேதாவிடமிருந்து பணம் பறித்து வந்தார். அவரின் உறவை விட்டு விடுமாறு நான் பலமுறை கூறியும் நிவேதா அதை கேட்கவில்லை.
மகளை பார்க்க வேண்டும் என நிவேதா கூறியதால், அவரை சென்னைக்கு அழைத்து வந்தேன். அப்போது, அண்ணாநகரில் கணபதியை பார்க்க வேண்டும் என கூறினார். அவரின் உறவை முறித்து விட்டு வா எனக்கூறினேன். ஆனால் அவரோ, கணபதியுடன் நெருக்கமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவேதான், அவர் மீது காரை ஏற்றி கொலை செய்தேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளையராஜா, கழிவறைக்கு சென்று தான் அணிந்திருந்த லுங்கி மூலம், அங்கிருந்த ஜன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்ட போலீசார் சிறையில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக அவர் ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்து விட்டார்.