1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 20 மார்ச் 2017 (18:03 IST)

நோட்டீஸின் நோக்கம் எஸ்பிபி அல்ல. இளையராஜா காப்புரிமை ஆலோசகர் விளக்கம்

இளையராஜா-எஸ்பிபி காப்புரிமை விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்திற்குரிய ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இரு தரப்பினர்களும் தங்களுடைய விளக்கத்தை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் இளையராஜாவின் இந்த நடவடிக்கை தவறு என்றே கூறி வருகின்றனர்.



 


இந்நிலையில் இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:  

எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம்.

கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.