விஜயகாந்த் கிணற்றில் விழச் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு விழுவோம் - அனகை முருகேசன்


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 21 மார்ச் 2016 (16:28 IST)
விஜயகாந்த் கிணற்றில் விழச் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு விழுவோம் என்று தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன் கூறியுள்ளார்.
 
 
தேமுதிக சார்பில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அனகாபுத்தூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனகை முருகேசன் தலைமை தாங்கினார்.
 
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அனகை முருகேசன், ”தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சக்தி தேமுதிகவுக்கு உள்ளது.
 
காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் பேசும்போது, என் தொண்டர்களை நான் கிணற்றில் விழச் சொன்னால் கூட கண்ணை மூடிக்கொண்டு விழுவார்கள் என்றார். அவரின் நம்பிக்கைக்கு ஏற்ப, அவர் எங்களை கிணற்றில் விழச் சொன்னாலும், விழும் முதல் மாவட்டமாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேமுதிக இருக்கும்.
 
இந்த இரண்டு கட்சியினருக்கும் நாங்கள்தான் எதிரி. சட்டமன்ற தேர்தலில் அந்த இரண்டு கட்சிக்கும் உண்மையான போட்டி எங்களுடன்தான்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :