1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (14:06 IST)

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

udhayakumar

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் அது ஜனநாயகத்தை அச்சுறுத்துவது போல அமையும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

 

திமுக தனது பவள விழாவை கொண்டாடி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிப்பது குறித்த பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து பவளவிழாவில் திமுக சீனியர்கள் பலர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ”மதுரையில் பருவக்காற்று திசை மாற்றத்தால் 105 டிகிரி வெயில் சுட்டெரித்து வருகிறது. மதுரை கொதிகலனாக இருப்பது போல தற்போது திமுகவில் யார் துணை முதலமைச்சர் என்ற கொதிகலனான விவாதம் நடக்கிறது.

 

எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என சினிமாவில் வருவதை போல உதயநிதியை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகம் உதயநிதியை சுற்றி வருவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். இது ஜனநாயகத்தை அச்சப்படுத்துவது போல உள்ளது. 75 ஆண்டு கால திமுக அரசியல் வரலாற்றில் 25 முறைதான் திமுக ஆட்சி செய்துள்ளது. அண்ணா ஆட்சி உருவாக்கியதை தவிர்த்து மற்றவை எல்லாம் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்ததுதான்” என கூறியுள்ளார்

 

Edit by Prasanth.K