1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (17:53 IST)

மோடி நினைத்திருந்தால் ஜெ,.வை காப்பாற்றியிருக்கலாம்: பரபரப்பை கிளப்பிய செம்மலை

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்திருந்தால் அவர் கட்டாயம் பிழைத்திருப்பார் என செம்மலை கூறியுள்ளார்.


 

 
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம குறித்து அறிய நீதி விசாரணை கோரி, ஓ.பன்னிர்செல்வம் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் எம்.எல்.ஏ. செம்மலை தலஒயில் போராட்டம் நடைப்பெற்றது. அதில் பேசிய அவர் கூறியதாவது:-
 
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்திருந்தால், ஜெ.வை வெளிநாட்டுக்கு கொண்டு சென்றிருப்பார்கள். ஜெயலலிதாவும் உயிர் பிழைத்திருப்பார், என்றார்.
 
இதன்மூலம் நாட்டின் பிரதமர் மோடி, ஜெயலலிதாவை நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவை வெளிநாட்டு கொண்டு செல்லக்கூடாது என ஒரு சக்தி தடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறிவருகின்றனர்.