வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (14:40 IST)

ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு: ஒசூரில் டாடா நிறுவனம் ரூ.7,000 கோடி முதலீடு!

tata,sempcorp
சென்னையில்  உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும்  ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பில் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம், தனது முதல் இந்திய உலகளாவிய திறன் மையத்தை அமைக்கவுள்ளது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓசூரில் டாடா நிறுவனம் ரூ.7000 கோடியில் முதலீடு செய்யவுள்ளது.

ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டில் ஐ-போன் உதிரி   பாகங்கள்  தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய  டாடா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள். செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள 30,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.