1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2017 (15:46 IST)

கலவரத்தை தூண்டிவர்கள் யார் என்பது எனக்கு தெரியும்: நடராஜன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்று எனக்கு தெரியும், ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.


 

 
மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதற்கு காவல்துறையும், அரசும் தான் காரணம் என்று பலர் கூறிவருகின்றனர். மத்திய அரசை சேர்ந்தவர்கள் தேசவிரோதிகள் போராட்டத்தில் நுழைந்ததுதான் வன்முறைக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.
 
தமிழக அரசும் அதையே காரனமாக கூறி வருகிறது. காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முற்பட்டதே வன்முறைக்கு காரணம் என்ற கருத்தை யாரும் முன்வைக்கவில்லை.
 
இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற சென்னை மெரினா போராட்டத்தில் கலவரத்தை தூண்டிவர்கள் யார் என்பது ஆதாரத்துடன் எனக்கு தெரியும் எனவும், அதை சமயம் வரும் போது உரிய ஆதாரத்துடன் வெளியிடுவேன், என்றார்.