திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (18:49 IST)

நான் அடிமை இல்லை: சீறிய எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என தெரிவித்தார்.
 
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், மத்திய அரசு கொண்டு வந்த, ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி அரசு ஆதரித்து வருகிறது என பேசினார்.
 
இதற்கு பதில் அளிக்கும்விதமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்குக் கைகட்டி, வாய்மூடி அடிமையாக நாங்கள் இருக்கவில்லை. மக்களுக்கான திட்டங்களுக்காகவும் நிதிக்காகவும்தான் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம். தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது, யாரிடமும் கைகட்டி நிற்பதற்கு இல்லை என்றார்.