செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (11:38 IST)

கள்ளக்காதலனுடன் மனைவி ஜல்சா: ஜன்னல் வழியாக பார்த்த கணவர்!

கள்ளக்காதலனுடன் மனைவி ஜல்சா: ஜன்னல் வழியாக பார்த்த கணவர்!

பப்பனப்பளி அருகே கள்ளக்காதலனுடன் தனது மனைவி உல்லாசமாக இருப்பதை ஜன்னல் வழியாக பார்த்த கணவர் அவர்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
ஜோலார் பேட்டையில் 28 வயதான குமார் என்பருக்கும் 23 வயதான நந்தினிக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. ஆனால் நந்தினிக்கு அடியத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயதான தேவேந்திரன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
 
இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இதனை அறிந்த நந்தினியின் கணவர் அவரை கண்டித்தார். இதனால் வாக்குவாதம் பெரிதாகி நந்தினி அவரது குழந்தைகளை அழைத்துக்கொண்டு பப்பனப்பளியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
 
ஆனால் அங்கு சென்ற பின்னரும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதனை அறிந்த நந்தினியின் கணவர் குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த குமார் ஜன்னால் வழியாக உள்ளே பார்த்துள்ளார்.
 
அப்போது தனது மனைவி நந்தினி அவளது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த குமார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து மாட்டிவிட வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினார். அதன் பின்னர் உறவினர்களை அழைத்து வந்து இருவருக்கும் தர்ம அடி கொடுத்தார் குமார்.