1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 11 ஜூலை 2016 (18:08 IST)

மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த கணவன் கைது

மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 

குமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி சீதப்பால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (41). செங்கல்சூளை தொழிலாளியான இவர், குடித்துவிட்டு வந்து மனைவி கலையரசியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது கலையரசியின் கையில் இருந்த டீயை தட்டிவிட்டதில் டீ உடல் முழுவதும் கொட்டியது. இதை, நர்சிங் படித்துவரும் அவரின் மகள் பவித்ரா தட்டி கேட்டார்.

இதனால் எரிச்சலான சுரேஷ்பாபு அருகில் இருந்த கத்தரிகோலால் பவித்ராவை குத்த முற்பட்டார். மகள் மீது குத்து படாமல் இருக்க கலையரசி குறுக்கே பாய்ந்து தடுத்தார். இதில், கலையரசியின் வயிற்றில் பலமாக குத்து விழுந்தது. இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் சுரேஷ்பாபு ஓடிவிட்டார்.

கலையரசியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேஷ்பாபுவை கைது செய்தனர்.