மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர்
கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட தகறாரில் ஆத்திரத்தில் கணவன் மனைவியின் காதை கடித்து துப்பிய சமபவம் சென்னை கொருக்குப்பேட்டை அருகே நடந்துள்ளது.
கொருக்குப்பேட்டை கிருஷ்ணப்ப கிராமணி தோட்டத்தை சேர்ந்த கேசவனுக்கும், அவரது மனைவி கவிதாவுக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நிதானம் இழந்த கேசவன் ஆத்திரத்தில் மனைவி கவிதாவின் வலது காதை கடித்து துப்பிவிட்டார்.
காது கடிபட்டு துண்டானதில் வலி தாங்காமல் கவிதா கத்தியதால் அருகில் உள்ளவர்கள் வந்தனர். அப்பொழுது கவிதாவின் வலது காதின் ஒரு பகுதி கிழிந்து துண்டானதை பார்த்த அருகில் உள்ளவர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் கவிதாவிடம் வாக்குமூலம் பெற மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் கவிதா தனது கணவர் ஏதோ ஆத்திரத்தில் செய்துவிட்டார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் கூறியுள்ளார்.
கவிதாவின் துண்டான காது கால தாமதமானதால் ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.