வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (09:09 IST)

கோவிஷீல்டு, கோவாக்சின் தயாரிப்பு முறையில் என்ன மாறுபாடு… ஒரு விளக்கப்பதிவு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் வேகமாகப் போடப்பட்டு வரும் நிலையில் என்ன தடுப்பூசியை போட்டுக்கொள்வது என்ற குழப்பம் மக்களிடையே உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் தயாரிப்பு முறையில் உள்ள வேறுபாடு குறித்து ஆனந்தகிருஷ்ணன் எழுதியுள்ள முகநூல் பதிவு இதனை விளக்கமாக எடுத்துக்கூறுகிறது.

Siva anandha Krishnan –ன் முகநூல் பதிவு :-

என்னிடம் பலர் COVISHIELD ஆ அல்லது COVAXIN ஆ.. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்.. அது எப்படி செயல்படுது பொதுவா என்ன முறையில் எல்லாம் தடுப்பூசி தயார் செய்கிறார்கள் ன்னு ஒரு பதிவை போட்டா நல்லா இருக்கும் ன்னு தொடர்ந்து கேட்டாங்க.. அதற்காக பொதுவாக நான்கு முறையில் கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.....
 
  1. WHOLE VIRUS
 
மிகப் பழமையான முறை இது. இந்த முறையில் என்ன செய்வார்கள் என்றால் உயிருள்ள வைரஸை எடுத்து அதை செயலிழக்க வைத்து விடுவார்கள். எளிதாக சொல்ல வேண்டுமெனில் ஊருக்குள் ஒரு கொலைகாரன் வந்துவிட்டான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அவன் கைல இரண்டு கத்தி இருக்கு..மூஞ்சி இப்டி இருக்கும். ஒரு கண்ணு இருக்காது. இந்த கலர் டிரஸ் போட்டு இருப்பான். அவன் கத்தி இவ்ளோ நீளமா இருக்கும் ன்னு அங்க அடையாளங்கள் கரெக்டா குறித்து வைத்து விடுவார்கள் விஞ்ஞானிகள். இப்ப விஞ்ஞானிகள் என்ன செய்வார்கள் என்றால் அந்த உண்மையான வைரஸை சோலியை முடிச்சு கொலைகாரன் என்கிற செத்த உடலை (Dead Virus or Attenuated) மட்டும் மனித உடலுக்குள் அனுப்பி விடுவார்கள். “கொலைகாரனின் கத்தி மூஞ்சி இதலாம் புதுசா இருக்கே...இவனை இது வரைக்கும் பாத்ததே இல்லையே.. அய்யயோ நம்ம Boss அ காப்பாத்தணுமேன்னு” .... நம்ம உடல்ல இருக்கிற நோய் எதிர்ப்பான்கள் எனப்படும் Antibodies அந்த உயிரில்லாத கொலைகாரனை (Dead Corona Virus) உயிர் உள்ள கொலைகாரனவே நினைத்து கொள்ளும். நினைத்து கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை தீவிரமாக உருவாக்கும். உதரணமா “அவன் கைல ரெண்டு கத்தி இருக்கு. ரெண்டு அருவாள் இருக்கு. அப்ப நம்மகிட்டயும் அதை தடுக்க ஆயுதம் இருக்கனும் ன்னு அதற்கு ஏற்றார் போல் நம்ம தயாரா இருக்கணும்” ன்னு ரெடியா இருக்கும். இப்ப உண்மையாவே ஒரு உயிருள்ள கொலைகாரன் உடம்புக்குள்ள வந்தா ரெடியா இருக்கிற நம்ம உடலின் நோய் எதிர்ப்பான்கள் (IgG) அவன் வந்த உடனே எளிதாக எதிர்கொண்டு நம் உயிரை காப்பற்றி விடும்.
இந்த முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி தான் COVAXIN
 
  1. VIRAL VECTOR
 

கொஞ்சம் நுட்பமான முறையில் தயாரிக்கப்படும் முறை. இங்கே என்ன செய்வார்கள் என்றால் கரோனா வைரசின் DNA வை எடுத்து சாதாரண சளியை ஏற்படுத்தும் Adeno Virus உடன் ஒட்டி வைத்து விடுவார்கள். இங்கே Adeno வைரஸ் என்பது ஒரு கொரியர் Boy மாதிரி தான். கொரியர் என்ன செய்யும்.. “சார் பார்சல் “.. என்று சொல்கிறது போல அந்த பார்சல் தான் கரோனா வைரசின் DNA. அந்த பார்சலில் ஒரு தகவல் இருக்கும் . என்ன தகவல் என்றால் “மனித உடம்புக்குள்ள போனதும் கரோனா வைரஸ் உடம்பு மேல இருக்கிற மாதிறியே நீ முள்ளை ஏற்படுத்தணும். அதான் உன் வேலை. ஆனா நீ நோயை ஏற்படுத்த கூடாது” . இப்படி உத்தரவு இருப்பதால் கரோனா வைரசின் முள் போன்ற அமைப்பு மட்டும் நம் உடலில் ஏற்படும். பிறகு நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பான்கள் அந்த முள்ளை எதிர்கொள்ள பயிற்சி மேற்கொள்ளும். இந்த பயிற்சியால் உண்மையான முள் போன்ற அமைப்புடன் வரும் கரோனா வைரஸ் வந்தால் அந்த பயிற்சியை வைத்து நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பான்கள்.
முட்டு கொடுக்கும். மேலதிகாரியின் உத்தரவை எப்படி OA/Peon மூலம் கொடுத்து வேலை செய்ய சொல்கிறார்களோ அந்த மாதிரி தான். அவர் என்ன செய்வார் .. “ ஐயா இதை செய்ய சொன்னங்க உங்களை” ன்னு சொல்லிடு போயிருவார். அதே தான் இங்க நடக்கும்.

இந்த முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்புசி தான் COVISHIELD,SPUTNIK
 
  1. mRNA Vaccine
 
மிக புதுமையான அதே நேரத்தில் மிகுந்த கடினமான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் முறை. இங்கே என்ன செய்வார்கள் என்றால் கரோனா வைரசின் mRNA வை எடுத்து கொள்வார்கள். இங்கே m என்பது messenger. இந்த RNA என்பது உத்தரவு போடும் அதிகாரி போன்றவர். நீ இதை செய் என்று கட்டளையிடும் போது அதை செல்கள் செய்யும். Vector முறை போன்று கொரியர் வேலை இங்கே கிடையாது. எதுனாலும் நேரடி டீலிங் தான். இங்கே என்ன நடக்கும் என்றால் mRNA நம் உடல் உள் சென்றதும் நம் மனித செல்களுக்கு உள்ளேயே சென்று கட்டளையிடும். என்ன கட்டளை என்றால் “ கரோனா வைரஸ் போன்ற முள் போன்ற அமைப்பை ஏற்படுத்து. மனித DNA க்குள் நீ செல்ல கூடாது “ என்பது தான்.  நம் செல்களும் உடனடியாக “உத்தரவு எஜமானே.உடனே செய்கிறேன் ” என்று அந்த முள்ளை (Spike Protein) ஏற்படுத்தும். ஏற்படுத்திய உடன் காவலர்களான நோய் எதிர்ப்பான்கள் மனித செல் தான் என்று அதற்கு அடையாளம் தெரியாமல். “கொலைகாரன் கொலைகாரன்னு..அய்யயோ எவனோ புதுசா வந்து இருக்கானே” ன்னு அந்த முள் போன்ற அமைப்பை எதிர்கொண்டு பழகிவிடும். பிறகு உண்மையான கொலைகாரனான Corona Virus அதே முள் போன்ற அமைப்புடன் வந்த உடன் “டேய் நீயா...உன்னை அன்னைக்கே கொன்னு அனுப்பனேன்ல...திருந்தலையா நீ ன்னு இப்பவே சோலியை முடிக்கிறேன் பாருடா ன்னு” நம் உடல் திறன்பட எதிர்கொள்ளும்.
இங்கே மேலதிகாரி OA/Peon லாம் நம்பாம நேரடியா களத்துல இறங்கிருவார். நேரடியா சொன்னா எப்படி வேலை அடிச்சு பிடிச்சு உடனே நடக்குதோ அதே மாறி தான் இந்த mRNA Vaccine செயல்படும்.
இந்த முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்புசி தான் Pfizer,Moderna
 
  1. PROTEIN SUBUNIT VIRUS
 
இங்கே கரோனா வைரசின் Spike Proteins போன்ற முட்களை மட்டும் பிரித்து எடுத்து அந்த முட்களை மட்டும் நம் உடலில் செலுத்துவார்கள். இது எப்படி என்றால் கொலைகாரனின் கையையோ காலையோ எடுத்து “ எப்பா இதான் பா கொலைகாரன் கை..பாத்துக்கோ” ன்னு அனுப்புற மாறி. நம் உடல் “ஒ.. இப்டி தான் இருக்குமா அவன் கையி.. ஒ இப்டிதான் இருக்குமா அவன் காலு.. ஒ இப்டிதான் இருக்குமா அவன் கத்தி.. வந்தா நா டீல் பண்ணிக்கிறேன்” ன்னு நம் நோய் எதிர்ப்பான்கள் பாத்து கத்து வச்சிக்கும்...பிறகே அதே போன்ற உடல் அமைப்புடன் கரோனா வைரஸ் வரும்போது பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் தடுப்புசிகளுக்கு Booster தேவைப்படும்.
இந்த முறையில் தயாரிக்கப்படும் தடுப்பூசி தான் NOVAVAX,EPIVAC,Sanofi-GSK